அமைச்சர் தியாகராஜனுக்கு அண்ணாமலை பதிலடி..!! ஓசி என்ற விமர்சித்தவர்களை ஏன் கண்டிக்கவில்லை..!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை அளித்துள்ளன ஆனால் மெட்ரோ ரயில் பயணியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு தமிழக அமைச்சர் தியாகராஜர் “பிரதமர் ஏன் பத்தாண்டுகளாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை என்பதை இந்த காட்சி விளக்குகிறது. பத்திரிக்கையாளர் தர்க்க ரீதியான சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருந்தது, பேருந்து சேவை இல்லாமல் இருக்கிறதா..? பேருந்து  போக்குவரத்தை பொருத்தவரை மாணவர்கள், முதியோர், மாதாந்திர பஸ் என சலுகைகள் வழங்கப்படவில்லையா..? பேருந்து சேவையானது மெட்ரோ ரயில் சேவையை பாதிக்கிறதா..? என்று கேட்டு கேட்டிருக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு இன்னும் நிதி வழங்க ஒப்புதல் தராமல் மத்திய அமைச்சரவை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்துள்ளது. சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த பிற நகரங்களுக்கான திட்ட அறிவிப்புகளுக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்”, என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “இலவச பேருந்து வெற்றிகரமான திட்டம் என்று கூறும் அமைச்சர் தியாகராஜன் திட்டத்தை ‘ஓசி’ என்று விமர்சித்த அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை..? தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சரும் பயனாளிகளை விமர்சிப்பது போல எங்கும் நடப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6000 பாஸ்கள் இயக்கப்படாததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார பஸ் கொள்முதல் அறிவிப்பாகவே உள்ளது”,  என குறிப்பிட்டுள்ளார்

Read Previous

மீனவர்கள் மே 21ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் ஐந்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!!

Read Next

பாலியல் வன்கொடுமை வழக்கு..!! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்ய தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular