அம்பத்தூரில் தாராள மனதை காட்டிய ஏடிஎம்..!! பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று அமைந்துள்ளது. அதன் அருகிலேயே அந்த வங்கியின் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகின்றது .

இந்நிலையில் இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று அதிகாலை பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர் .ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக இயந்திரம் தாராளமாக அள்ளி வழங்கி உள்ளது .இருப்பினும் வாடிக்கையாளர்களின் செல்போனிற்கு அவர்கள் குறிப்பிட்டபணம்  மட்டுமே எடுக்கப்பட்டதாக தகவல்களும் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது அம்பத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 8000 பணம் எடுத்த போது கூடுதலாக 12 ஆயிரம் சேர்ந்து மொத்தம் 20 ஆயிரம் வந்துள்ளது, அதேபோல் திருமுல்லைவாயல் பகுதியை சார்ந்த சந்திரசேகர் என்பவர் ரூ 20,000 எடுத்த முயற்சி செய்த போது அவர் ரூ 8000 மட்டுமே பணம் எடுக்கலாம் என்று ஏடிஎம் இயந்திரத்தில் தகவல் காண்பித்துள்ளது.

அதன்படி அவர் 8000 எடுத்துள்ளார், ஆனால் ஏடிஎம் இயந்திரம் அவருக்கு 20 ஆயிரத்தை கொடுத்துள்ளது.இதனால் ஏடிஎம் வாசலில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏடிஎம் மையத்தில் கூடுதலாக பணம் எடுத்த வாடிக்கையாளர்களின் 6 பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை காத்திருந்து பின் வங்கி திறந்ததும் சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் எழுதிக் கொடுத்து ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தையும் கொடுத்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும்   தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகவல்களை தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் அவர்கள் விரைந்து வந்து ஏடிஎம் இயந்திரத்தில் பழுது பார்த்தார். அப்போது 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதன் பின் உடனடியாக ஏடிஎம் இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக பணம் எடுத்தவர்கள் யார்..? யார்..? என்ற விவரத்தை வைத்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை பணம் வாரி வழங்கிய இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

பாஜக நிர்வாகிகள் சந்திப்பு..!! திடீரென வேட்புமனுத்தாக்கல் தேதியை மாற்றிய அதிமுக..!!

Read Next

மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து..!! ஒருவர் பலி..!! ஒருவர் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular