அம்பானி மருமகளுக்கு மாமியார் கொடுத்த வாய்பிளக்கவைக்கும் கிஃப்ட்.!! போட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்.!!

தங்களது குடும்பத்திற்கு வர போகும் மருமகள் ராதிகா மெர்சண்டிற்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி ரூ. 640 கோடி மதிப்பில் ஒரு சொகுசு வில்லாவை பரிசாக வழங்கியுள்ளார், அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆர்த்தி உள்ளது.

பலரையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் விஷயம் ஆனந்த் அம்பானிக்கும்- ராதிகா மெர்சண்ட்க்கும் எப்போது திருமணம் என்பதுதான். ஏற்கனவே ஜாம்நகரில் பிரம்மாண்டமான முறையில் மூன்று நாட்கள் ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. இதில் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், உலக பணக்காரர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் திருமண நிகழ்வுகள் இச்திய முறைப்படி கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி இரண்டாம் கட்ட கொண்டாட்டம் நடக்க உள்ளது, இதற்காக மே 28 இலிருந்து வேலைகளில் தொடங்குகின்றன, இந்த கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக 800 விருந்தினர்கள்  கொண்ட ஒரு சொகுசு கப்பல் இத்தாலியிலிருந்து பிரான்ஸ் வரை செல்ல உள்ளது. இந்த விருந்து நிகழ்வு எந்த அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தனது மருமகள் ராதிகா மெர்சண்டுக்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி ஒரு சொகுசு வில்லாவை பரிசளித்துள்ளார். துபாயில் உள்ள இந்த உல்லாச வில்லாவின் மதிப்புரூ. 640 கோடி இதில் 70 மீட்டர் தூரத்திற்கு ஒரு தனியார் கடற்கரை இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதில் பத்து ஆடம்பர படுக்கை அறைகள் உள்ளதாம்.

இதில் மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இத்தாலி பழைய கற்களை கொண்டு உட்புற வேலைபாடுகள் பிரமிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது விடுமுறை காலங்களில் பார்ட்டிகள் நடத்தவும், பொழுதை கழிக்கவும் இந்த வில்லா உகந்ததாக இருக்கும் தனது மருமகளுக்காக அம்பானி குடும்பம் இதை பார்த்து பார்த்து வாங்கியுள்ளது இந்த புகைப்படம் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Nita ambaniNita ambani

Read Previous

குழந்தைகள் அழுவதை தடுக்க செல்போன் கொடுக்குறீங்களா..? பெற்றோர்களே கவனமா இருங்க.!!

Read Next

பென்ஸ் காருக்கு பிரசவம்; குழந்தையை பெற்றெடுத்த கார்; இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular