
தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வரும் முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணம் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் சினிமா துறை சார்ந்த நட்சத்திர பிரபலங்களும் தொழிலதிபர்களும் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த விஐபிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் பல மாதங்களாக தொடர்ச்சியாக பல விழாக்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த திருமணம் பலகோடி பட்ஜெட் பொருள் செலவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றதில் இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், இயக்குனர் அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சிகள் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் மகள் சௌந்தர்யா குடும்பத்தினருடன் கலந்து கொண்டார், அப்போது கல்யாண வீட்டில் பிரபலங்கள் பலர் நடனமாடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இப்போது நடிகர் சூப்பர் ஸ்டார் நடனமாடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.