அம்மாவாசையில் வாசலில் கோலம் போடலாமா அமாவாசை நல்ல நாளா?.. பெண்கள் விரதம் இருக்கலாமா அபார ஆன்மீக பலன்கள்…!!

அம்மாவாசை என்பது நல்ல நாளா அமாவாசையில் குடி போகும் வீட்டில் பால் காய்ச்சலாமா அமாவாசை தினத்தன்று வாசலில் கோலம் போடலாமா அமாவாசைகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எல்லாம் நம்முடைய முன்னோர்கள் தெளிவாக எடுத்துரைக்கிறார்கள்…

அம்மாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்கின்றன அன்றைய தினத்தன்று நம்முடைய முன்னோர்கள் விண்ணில் இருந்து மண்ணிற்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது எனவே அமாவாசை தினத்தில் சில காரியங்களை துவங்குவது நன்மையாகவே கருதப்படுகிறது. குறிப்பாக அம்மாவாசை தினத்தில் பிறக்கும் குழந்தைகள் அபார மூளையுடன் இருக்குமாம் இந்நாளில் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி உருவாகிறது எனவே பிறக்கும் குழந்தைகளின் மூளையும் பிற்காலத்தில் அதிகமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபனமாய் இருக்கிறது. ஆனால் அம்மாவாசை அன்று விபத்துகளும் அதிகமாக நடப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறியிருந்தனர்..

தர்ப்பணம் ; முன்னோர்கள் பித்ருக்கள் இந்த ஒரே நாளில் மட்டுமே வீட்டிற்கு வருவதால் முறையாக வழிபட வேண்டும் அதனால் தான் அன்றைய நாளில் முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்கக்கூடாது எண்ணெய் தேய்க்க கூடாது என்பார்கள் அதிலும் வெள்ளிக்கிழமையில் அம்மாவாசை வந்தால் பித்ரு பூஜை முடிந்த பிறகு தான் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டுமாம் எனவே நல்ல காரியங்கள் எதுவானாலும் அம்மாவாசையில் பித்ரு பூஜை முடிந்த பிறகு செய்தால் கூடுதல் பலன் கிடைக்குமாம்..

அம்மாவாசை அன்று முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல் பூஜை செய்தால் தவிர்க்க வேண்டும் அது மட்டுமல்லாமல் அமாவாசை தூறும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்து கொண்டிருப்பார்களாம் அதனால் தான் அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது என்கிறார்கள்..

அம்மாவாசை ; எனவே அம்மாவாசை தினத்தில் வீட்டை கழுவி மட்டும் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் கோலம் போடக்கூடாது அம்மாவாசை தவிர முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் நாளிலும் திதி வரும் நாளிலும் பூஜைகள் செய்யும்போது வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்பார்கள் பூஜை அறையிலும் கோலம் போடக்கூடாது..!!

Read Previous

வேலைக்கு ஏற்ற பணியாளரை தேர்ந்தெடுப்பது எப்படி : உங்களுக்கு பயனுள்ள தகவலாக அமையும்..!!

Read Next

பலவீனமான செயல்பாடுகள் கொண்ட பெண்களை, ஆண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular