அம்மாவும் மகளும்..!! சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

அம்மாவும் மகளும்( சிறுகதை)

சிவகாமி கவருமெண்டு பள்ளிக்கூடத்துல அஞ்சாப்புவாத்தியாரம்மா.
பாக்க அழகா வெடவெடன்னு இருக்கும் நல்ல வடிவு. அவளுக்கு ஒரு அக்கா அவளும் நல்ல வடிவுதான். அவ ஒருத்தரைக்காதலித்து பெத்தவுக ஒப்புதலோட கலியாணம் பண்ணிக்கிட்டா ஏன்னா ரெண்டுபேரும் ஒரே சாதி அதுவும் போக அவர் கவருமெண்ட் வேலை இந்தப்பிள்ளைக்கு வேலை வெட்டி ஏதுமில்லன்றதுனால பிரச்சனை பெருசா வரல

சிவகாமி அதே ஊரில இருக்குற சிவாவக் காதலிச்சா ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உசுறு, அவனைப்பாக்காம இவளால இருக்க முடியல அதுபோலத்தான் அவனுக்கும்

அதுநால அடிக்கடி பள்ளிக்கொடத்துக்கு லீவுபோட்டுட்டு வெளியூர்போய் சந்திப்பாக பள்ளிக்கொடம் போறேன்னு சொல்லிட்டு காதலனைப்பாக்கப்போறது அடிக்கடி ந்டந்துச்சு

சிவகாமி வீட்டுக்கு இது அரசல் புரசலாத் தெரிஞ்சி டுச்சு அதுனால தெனம் பள்ளிக் கொடத்துக்குப்போன்பண்ணிக்கேப்பாக வந்திருக்காளான்னு, அவங்களுக்கும் வேற என்னா பண்ணுறதுன்னு தெரியல. பையன் வேற ஜாதி. பொண்ணு சம்பாரிக்கிது அதைவைச்சிக்கொஞ்சநாள் ஓட்டலாம் நு ஒரு ஆசை ஏன்னா சிவகாமி அப்பாவுக்குப் பெருசா வேலை ஒன்னுமில்ல அதுநால காதலுக்குத் தீவிர எதிர்ப்பா இருந்தாங்க

இது சிவகாமிக்குத்தெரிஞ்சிபோச்சு அதுனால
பள்ளிக்கொடத்துல கெட்மாஸ்ட்டர் அம்மாகிட்ட
சொல்லி வைச்சிட்டா அந்தம்மா காதலுக்கு மருவாதை தருகிற அம்மா. அதுவும் போக அந்தம்மா கொஞ்சம் சிவப்பு சிந்தனை உள்ளவங்க. அதுனால அனுசரிச்சி நடந்துக்கிட்டாங்க. இது இப்படிப்போய்கிட்டு இருந்துச்சு
சிவகாமி மகளைக்கூப்புட்டுக் கண்டிச்சா. ஆனா சிவகாமி அதை கண்டுக்கல. அவபாட்டுக்கு அவ காதல்ல இருந்தா. அப்பாவும் சொல்லிப்பாத்து ஒன்னும் நடக்கல. அவங்க கேட்டா சரி நான் வேலைய விட்டுடுறேன் போகலைன்னு சொல்லுவா . அவ வேலைக்கிப்போய் வார சம்பளம் இவங்கலுக்குத்தேவையா இருந்துச்சு

அன்னிக்கி சிவமாமி, சிவா ரெண்டுபேரும் சோடியா அணைக்கட்டுக்குபோயி ருந்தப்போ வீட்டுலருந்து பள்ளிகொடத்துக்குப் போன் பண்ணிருக்காக அன்னிக்கிப்பாத்து பியூன்
போனெடுத்து ஒளறிட்டான், அதை காதலுக்கு மருவாதைகிட்டசொல்லிட்டான்

அந்த அம்மா சிவகாமிக்குதகவல் கொடுத்துச்சு
சிவகாமி சொல்லிப்புட்டா இனிமே எங்க வீட்டுக்குள்ளநொழைய முடியாது எங்காத்தா அடிச்சே கொன்னுபுடுவான்னு

சரி ரெண்டுபேரும் கலியாணம் செய்யலாம்னு
முடிவெடுத்தாக, ஆனா சிவகாமிவீட்டுல போலீசுலகம்பிளெயிண்ட் கொடுத்துட்டாக போலீசு சிவாவோட அம்மா அப்பாவ போலீஸ்ஸ்டேசன்ல கொண்டு போய் வைச்சிட்டாக

இது சிவாவுக்கு அவனோட மாமா மூலமா தெரியவந்துச்சுரெண்டுபேரும் செல்போன அமத்திபுட்டு பிரண்டு ஊருக்குப் போயிட்டாக சிவா பிரண்டு ஒருத்தரு வெவரம் தெரிஞ்சவரு
சரி ரெசிஸ்ட்டரு மேரேசுபண்ணிடலாம் ஆனா இன்னிக்கிவெள்ளிக்கிழம சாயந்தரமாயிப் போச்சு திங்கக்கெழமதான் பண்ணமுடியும் அதுவரைக்கும் ஏங்கூடவே இருங்கன்னாரு

இதுக்கு நடுவுல ஊருபூராம் தகவல் பரவி சிவகாமி வீட்டுல ஊருகூடிடுச்சு ஆளாளுக்குத் திட்டுனாக ஓடுகாலிமுண்டன்னு மாமா தகவல்சொன்னாரு பிரண்டுமூலமா எங்க இருக்கன்னு கேட்டாரு

ஒங்க அம்மாகிட்ட ஒருவார்த்தசொல்லப்புடாதா
பதறிப்போயிக்கிடக்காக ஒங்க அம்மான்னு சொன்னாரு சிவா அவசரப்பட்டு அம்மாவுக்குப் போன் போட்டான் அந்தப்பக்கத்துல போலீசு அப்புடியே அமத்திப்புட்டான்போன.

பிரண்டு சொன்னாரு ”இனிமே இங்குன இருக்காத
போனைவைச்சிக்கண்டுபுடிச்சிருவாக இப்புடியே கெளம்பி எங்கூடப்படிச்சவன் அட்ரஸ்தாறேன் அவனுக்குசொல்லிட்டேன்அங்குணக்குள்ள போயி இருந்துட்டு திங்கக்கிழமை காலையில முருகன் கோயிலுக்கு வந்துருங்க நானும் வக்கீலோட
வந்துருவேன் கலியாணத்தை முடிச்சிட்டு அப்புடியேரெசிஸ்ட்டராபீஸ்ல பதிவு பண்ணி டலாம் ”ன்னாருரெண்டுபேரும் கண்கலங்க கிளம்புனாங்க

அதேமாதிரி பிரண்டு வீட்டுல போய்த்தங்கிட்டு பிரண்டு கூட திங்கக்கெழம முருகன் கோயிலுக்கு வந்தாக. அங்குனஎல்லா ஏற்பாடும் செஞ்சிருந்தாரு அந்த வெவரம் தெரிஞ்சவரு. அன்னிக்கி முருகன் சன்னதில வைச்சிக் கலியாணம் நடந்துச்சு அப்ப சிவாவும் சிவகாமியும் அவருகால்ல விழுந்தாக கண் கலங்கி
சிவா எங்கப்பாம்மா பாக்க முடியாமப் பொச்சேன்னு அழுதான் சிவகாமி சொன்னா ”பொம்பள நானே கலங்காம இருக்கேன்
ஆம்புளப்புள்ள அழுகலாமாயா”ன்னு தொடச்சிவிட்டா ரெசிஸ்ட்டரும் பண்ணியாச்சு கூட பத்து பிரண்டுக வந்திருந்தாக எல்லார் கண்ணுலயும் ஆனந்தக்கண்ணீரு
இப்ப வெவரம் தெரிஞ்சவரு சொன்னாரு ”கல்யாணம் பண்ணுனது நல்லதுதான். நீங்க ரெண்டுபேரும் கடைசிவரை சேந்து புள்ள குட்டி பெத்து ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழனும்” நு ஆசீர்வாதம் பண்ணினாரு

இப்போ சிவகாமி போன் பண்ணுனா அவளோட
அம்மாவுக்கு ”இந்தா அம்மா அப்பா எங்க கலியாணம் ஆயிடுச்சு நானே விருப்பப் பட்டுதான் கட்டிகிட்டேன் வாட்சாப்புல போட்டோ அனுப்பிச்சிருக்கேன் பாத்துக்கங்க நானு மேஜரு என் விருப்பத்தோட தான் எல்லாம் நடந்திருக்கு”ன்னு

பேக்ஸ்ல போலீசு அப்புறம் எல்லாருக்கும் தகவல் அனுப்புனா அவளோட அம்மா போன்ல அழுதுகிட்டே திட்டுனா
” ஒனக்கு அம்புட்டு திமிறா என் மூஞ்சில முழிக்காத ஒன்னப்பெத்ததுக்கு இந்த வயித்துல கருங்க்கல்லால தான் அடிச்சிக்கனும் “

இதுநடந்து ஒருவருசம் ஓடிப்போச்சு இவ நெறமாசம் இப்போவும் அவ வீட்டுல ஏத்துக்கல தனியாக கண்ணு கலங்குவா கேட்டா ஒண்ணுமில்லைம்பா பொண்கொழந்தையும் பொறந்துடுச்சு இவளுக்கு

ஆசுப்பத்திரிலதான் இப்பவும் இவ கண்ணத் தொடச்சிட்டெ இருந்தா இருக்காதா பின்ன அம்மாவப்பாக்கனும்னு
அப்பப்பாத்தா அவளுக்குபின்னாடி யாரோ அழுகுறமாதிரி இருந்துச்சு திரும்பிப்பாத்தா அம்மாதான்
கட்டிப்புடுச்சிக்கிட்டா அம்மா அம்மான்னு அப்ப அம்மா சொன்னா கண்ணீரோட
“அழாதடி செல்லம் இப்பவும் அவருக்குத் தெரியாமத் தான் வந்திருக்கேன் மனசுகேக்கல உன் வீட்டுக்காரர்தான் ஒரு ஆள் மூலமா தகவல் குடுத்தாரு. அடசகோழிக்கொளம்புவைச்சிக் கொண்டாத்திருக்கேன் பச்ச ஒடம்பு தெம்பு வேணும் பால்குடுக்க ஏம்பேத்தியக்குடு”ன்னு வாங்கி புதுச்சட்டபோட்டுமொச்சு மொச்சுன்னு முத்தம் கொடுத்தாஅம்மா

சிவகாமிகண்ணுல கண்ணீர் பொலபொலன்னு கொட்டுச்சு ஆனா அந்தபயபுள்ள பேத்திக் கொழந்த சிரிச்சிச்சு ரெண்டுபேரையும் பாத்துக்கிண்டல்பண்றமாதிரி
சிவகாமிசொன்னா ”ஆத்தாமகளுக்குள்ள ஆயிரமிருக்கும் போடின்னா”……
கண்ணத்தொடச்சிக்கிட்டே,,,,
அதைப்பாத்து கண்ணத்தொடைச்சிக்கிட்டான் அவளோட காதல் கணவன்..

Read Previous

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!! இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

அவசியம் படியுங்கள்.. டச்சிங்.. படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular