
அம்மா நீ அற்புதம் நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா நம் அம்மாவின் பால் தான் .என் முகம் பார்க்கும் முன்பே என் குரல் கேட்கும் முன்பே என் குணமரியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம் என் அம்மா மட்டும்தான். என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலை தான் இருந்தது அம்மாவுக்கு. என் அம்மாவின் தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும் அதனால்தான் பிறக்கல அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன்.
ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்தாலும் அம்மாவின் சேலையில் துடைக்கும் போது ஆறாத துன்பம் நீங்கியது. நான் நேசித்த முதல் பெண்ணும் என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே அம்மா .அம்மா அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன் ஒரு அம்மாவின் இறுதி ஆசை என் கல்லறையின் மீது உன் பெயரை எழுதி வை உன்னை நினைப்பதற்கு அல்ல அங்கும் உன்னை சுமப்பதற்கு.