
அம்மா அப்பா அண்ணன் தங்கைக்கு பின் இந்த உலகத்தில் விசித்திரமான ஒரு உறவு இருக்கிறது என்றால் தாயிக்குபின் தாராமாக..,
அது கணவன் மனைவி உறவுதான்.
இந்த வாழ்க்கையில் உன்னதமான ஒரு உறவு இருக்கிறது என்றால்..
அது கணவன் மனைவி உறவுதான்.
இந்த இயற்கை மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் ஒரு ஆயுட்கால உறவும்..
கணவன் மனைவி உறவுதான்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஓரிடத்தில் இணையும் ஒப்பற்று உறவும்..
கணவன் மனைவி உறவுதான். இன்றைய தலைமுறையில் காதல் திருமணம் என்பது பரவலாகி விட்டது.
சென்ற தலைமுறையில் காதல் என்பதே சமூகத்தின் பார்வையில் தீங்கான அல்லது கெடுதலான ஒரு விடயமாக இருந்தது.
அதனாலேயே திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய துணையை காதலிக்கக்கூட தயக்கங்களை அனுமதிக்கப்பட வேண்டியதாக இருந்தது.
இங்கே உங்களில் எத்தனை பேர் உங்கள் துணையிடம் உங்களை காதலை தெரிவித்திருப்பீர்கள். அல்லது வெளிப்படுத்தியிருப்பீர்கள்
இதற்கான பதில் உங்களில் பலரிடத்தில் கேள்விக்குறியாக மட்டுமே இருக்கும்.
காரணம்.. திருமணமான புதிதில் உங்கள் துணையிடம் காதலை தெரியப்படுத்தினாலோ வெளிப்படுத்தினாலோ
வெட்கமும் தயக்கமும் உங்களுக்கு துணையாக இருந்திருக்கும்.
சில வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் பிறந்து, அவர்களை வளர்த்து, அவர்களுடைய எதிர்காலத்திற்காக உங்களின் விருப்பு வெறுப்புகளை மறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காதல் தயங்கிக்கொண்டிருக்கும்.
எத்தனை வருடங்களானாலும் காதல் என்பது நம்முடன்தான் பயணித்துக்கொண்டே இருக்கும். அதனை வெளிப்படுத்தத்தான் காலமும் சூழலும் அமைவதில்லை.. அமைய விடுவதில்லை.
இந்த நிமிடம் முதல் நீங்கள் உங்கள் துணையிடம் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்துங்கள்.
உங்கள் துணை மீது நீங்கள் வைத்திருக்கும் நேசத்தை காதலாக வெளிப்படுத்த வாருங்கள்.
உங்கள் துணையிடம் நீங்கள் மறைத்து வைத்திருந்த, மறைக்கப்பட்டிருந்த பாசத்தை காதலுடன் தெரியப்படுத்துங்கள்.
நாளைய தினம் காதலர் தினம் மட்டுமில்லை.. உங்களிருவருக்கான தினமுமாகவும் இருக்கட்டும்.
உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.