அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த முடிவு – ரூ.5 கோடி ஒதுக்கீடு..!!

அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அம்மா உணவகம்:

 

மனிதர்களின் வாழ்வாதாரத்தில் முதன்மை வகித்து வருவது உணவு. அத்தகைய உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு முதலிய அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் வாழும் சாதாரண மக்களுக்கு உணவு கட்டாயம் என அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பலர் பயனடைந்து வருகின்றனர்.

 

 

தற்போது சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களை தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த உணவக கட்டங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவாக்குவதுடன் மட்டுமல்லாமல் அம்மா உணவகத்தில் இருக்கும் பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறை பொருட்களை மாற்றவும் மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய வகை உணவுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Read Previous

கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் இருந்து எடை இழப்பு வரை.. ப்ரோக்கோலியில் உள்ள பல நன்மைகள்..!!

Read Next

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular