அம்மா என்ற பந்தத்திற்கு ஆயிரம் உறவுகள் ஈடு இணையாகாது அவள் ஒருத்தி மட்டுமே நம் உயிருக்கும் உணர்வுக்கும் வலி மருந்து ஆவால்..
நூறு ஒரு தகப்பன் ஒரு தாய்க்கு சமம் ஆகுவான் என்று பழமொழி உண்டு ஒரு தாய் இருந்தால் அந்த குடும்பமே 10 வீடு பண்ட பாத்திரம் கழுவுவியாது ஒழுக்கமான முறையில் அன்பைத் தந்து தன் பிள்ளைகளை வளர்த்து விடுவாள், தன் பிள்ளைகளின் கஷ்ட காலத்தில் தன் பிள்ளைகளுக்கு துணையாக நின்று அவர்களை ஆறுதல் படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கான நம்பிக்கையை ஆணித்தனமாக அவர்களுக்குள் புகுத்துவாள், தன் வயிறை காய வைத்தாவது தன் பிள்ளைகள் வயிறை நிரப்பி விடுவாள் எத்தனை சொந்தங்கள் இருந்தும் ஏறெடுத்து பார்க்காமல் தன் பிள்ளைகளுக்காக தன் கால்தேய உழைத்திடுவாள் அவள் உழைப்பில் சிந்திடும் வேர்வைகள் எல்லாம் முத்துக்களும் வைரங்களும் பதித்த சிலையே, தாய் இல்லை என்றால் தன்னம்பிக்கையும் அரவணைப்பும் அன்பும் இவ்வுலகில் இல்லாமலே போகிவிடும் வாழும்போதே தாயை மதித்து விடுங்கள் அவள் இல்லாத காலத்தில் அவளை நினைத்து அழுவதால் என்ன நடக்கப் போகிறது இல்லை என்னதான் மாறப்போகிறது..!!