உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக ஒப்பந்தம் குறித்து கடந்த ஆண்டு உத்தர பிரதேச அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.
கடந்த ஆண்டு முதல் தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தையில் அருங்காட்சியம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தற்பொழுது தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக டாடா சன்ஸ் நிறுவனம். ரூ.650 கோடி செலவில் கோவில்களில் அருங்காட்சியகத்தை அயோத்தியில் அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இடத்தினை உத்தர பிரதேச அரசின் சுற்றுலாத்துறை டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க உள்ளது.
மேலும் இந்த நிலத்தை 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு தருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 90 ஆண்டு கால குத்தகைக்கு ஈடாக ரூ.1 வசூலிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது, இந்நிலையில் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து செலவு செய்து அருங்காட்சியகம் அமைக்க உள்ள டாடா சன்ஸ் நிறுவனம் அந்த அருங்காட்சியகம் இந்தியா முழுக்க உள்ள வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற கோயில்களின் கட்டமைப்பு திறன்களை வெளிப்படுத்துவதாக இருக்கும் என சுறி உள்ளனர்.
மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் 100 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட மன்றம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அயோத்தியில் கோயில்களின் அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்ட விவரங்களை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.