அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள்..!! எப்போது முடிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் இருக்கும் ராமர் பக்தர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிவதற்காக காத்திருக்கும் கோவில் தான் அயோத்தி ராமர் கோவில். இந்தக் கோவில் இன் கட்டுமான பணிகள் எப்போது முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கும் வேலையில் ஒரு முக்கிய தகவல் இப்போது கிடைத்துள்ளது. அதாவது அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் வரும் ஜூன் 5 முடிவடையும் என  ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது 99 சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்து விட்டதாகவும் ராமர் தர்பார் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் இருக்கிறதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கோயில் வளாகத்தில் உள்ள வால்மீகி அகத்திய முனி ஆகியோரின் கோயில்களையும் ஜூன் 5-க்கு பிறகு பொதுமக்கள் தாராளமாக தரிசிக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Read Previous

ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி..!! முழுப் போரில் இறங்குமா இந்தியா..!!

Read Next

எலும்புகளில் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதா..!! இந்த உணவுகளை சாப்பிடுங்கள் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular