அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது..!! போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாளுக்கான அரசாணை குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

அரசு பணிக்கான போட்டி தேர்வுகள் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவது குறித்து தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதை தற்பொழுது நடைமுறையில் உள்ள பொது தமிழ், பொது ஆங்கிலத்தாள் உள்ளன, இனிவரும் காலத்தில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக நடைமுறைப்படுத்தப்படும். மேலும் இந்த கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாவிட்டால் மற்ற தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அதன் மீதான விசாரணையில் குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொள்வது அவசியம். எனவே அவர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்று இருப்பதும் அவசியமாய் உள்ளது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ் மொழியில் 40 சதவீதம் மதிப்பெண்கள் தான் தேர்ச்சிக்கு தேவை என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற கூறி தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Read Previous

ரேஷன் கடையில் 50 மில்லி மண்ணெண்ணெய் விநியோகம்..!! அதிர்ச்சியை உறைந்த சிவகங்கை மக்கள்..!!

Read Next

அயோத்தியில் ராமர் கோயில் வேண்டும்..!! அப்பொழுதே ஜே. ஜெயலலிதா சொன்னார்..!! முருகன் பரபரப்பு பேட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular