அரசியல் தமிழகம் இந்தியா உலகம் வீடியோ சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் வெப் ஸ்டோரீஸ் Search… கொள்ளை சம்பவத்தில் தொழிலதிபர் மரணம்..!! குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வருகின்ற டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கிளையை வணிக தலைவர் வினய் தியாகி தொழிலதிபர் ஆவார். இவர் சம்பவ  தினத்தன்று மர்ம நபர் ஒருவரால் வழிப்பறி கொலைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார்.

கடந்த மே 3-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.  கொலை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்பொழுது டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அக்னி என்ற தக்ஸ் என்பவர் வினயை கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தலைமறைவான அக்கினியை காவல் துறையினர் வலைவீசி தேடி இன்று கைது செய்த நிலையில் அவர் அதிகாரிகளை தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார்.

இதனால் அவரை எச்சரித்த காவல்துறையினர் அறிவுரையை கேட்காமல் குற்றவாளி செயல்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் முடிவில் அதிகாரிகள் தங்களின் பாதுகாப்பு நலன் கருதி  வேறு வழி இன்றி பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் குற்றவாளி ஆன அக்னி என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் பிரத பரிசோதனைக்காக அதிகாரிகளால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read Previous

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..!! “காரணம் இதுவே” – அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

Read Next

#Breaking: இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! 30 பேர் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular