
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை ED மற்றும் NIA -யை வைத்து டெல்லியை ஆளும் பாஜக அச்சுறுத்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் 24 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மறைந்த பாமக பிரமுக திருபுவனம் ராமலிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியை சார்ந்த நபர்களின் அலுவலகம் வீடுகள் போன்றவற்றில் சோதனை நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து உள்ள விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் “தமிழகத்தில் காலூன்ற நிலைக்கும் டெல்லி பாஜக முன்னதாக ED-யை ஏவி வந்தது தற்போது NIA ஏவி வருகிறது அரசியல் தலைவர்களை பாஜக அச்சுறுத்தி வருகின்றது. இவை மிகவும் கண்டிக்கத்தக்கது”, என்று தொல் திருமாவளவன் பேசி உள்ளார்