அரசுப்பேருந்தில் போலி பயணச்சீட்டு: பிடிப்பட்ட நடத்துநர்..!!

சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த குளிர்சாதன பேருந்தில், வடலூர் பகுதியில் இருந்து பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஏறினர். அவர்கள் பயணிகளிடம் பயணச்சீட்டை வாங்கி பரிசோதனை செய்தபோது அது போலி என தெரியவந்தது. பின் அவர்கள் நடத்துநரிடம் இருந்த பயணச்சீட்டை வாங்கி பார்த்தப்போது அது போலியானது என தெரியவந்தது. மேலும் நடத்துநரின் பேண்ட் பாக்கெட்டில் போலி சீட்டு இருந்ததையும் கண்டுப்பிடித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துறை அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read Previous

அடுத்த அமைச்சர் இவரா? அண்ணாமலை அட்டாக்..!!

Read Next

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை வசதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular