நம் நாட்டின் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலை படி நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலத்திலிருந்தே அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலை படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா முடிந்து இன்னும் எங்களுக்கு அந்த தொகையை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த தொகை எங்களுக்கு எப்போது வழங்கப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கைகள் எழுந்து வந்தன. அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அகவிலைப்படி வழங்குவது குறித்து எந்த முடிவும் இல்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழலில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தியதே பெரும் உதவியாக இருந்து வந்தது என்று மத்திய நிதி இணை அமைச்சர் கூறியுள்ளார்.