அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு – முழு விவரங்களுடன்..!!

மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு:

அரசு வேலை என்பது பலரது கனவாகவே உள்ளது. தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அல்லது மாநில அரசு பணிகளில் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். தேர்வு செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் பின் அவர்கள் மிகவும் அலட்சியமாக உள்ளதாக புகார் எழுந்து வருகிறது. ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருதல் போன்றவற்றால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இது குறித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்கு  பணிக்கு வரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அரை நாள்விடுப்பதாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விடுப்பு வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஊழியர்கள் பணிக்கு சரியான நேரத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

நீலகிரிக்கு ஆரஞ்ச் அலார்ட் சென்னையில் 336 சதவீதம் மழை..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Read Next

பெரும் சோகம்..!! ஒரே குடும்பத்தில் மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular