நமது தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு விதமான நலத்திட்டங்கள் மற்றும் பதவி உயர்வு போன்ற சாதகமான பல்வேறு அம்சங்களை அறிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு இன்னும் 4 வகையான அம்சங்களை அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
அம்சங்கள்:
1. அரசு ஊழியர்களை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அகவிலைப்படி
உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது கடந்த மாதம் அகவிலைப்படி 9% உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
2. தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மின்வாரிய ஊழியர்கள் அரசு சான்றிதழ் அதாவது வாழ்நாள் சான்றிதழ் வாங்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது.
3. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை பணியாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் ஊக்கத்தொகையாக 58.50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. மேலும் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு என்று தனியாக பணப்பலன் 38 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.