அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!! 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை..!!

புதுச்சேரியில் நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்த 7வது சம்பள கமிஷனின் பரிந்துரை தற்போது அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி அம்மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முழுநேர தினக்கூலி ஊழியர்கள் வரிசையில், பிரிவு 1, 2 மற்றும் 3 ஊழியர்களுக்கு ரூ. 876 ஆக இருந்த ஊதியம் ரூ. 900 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பிரிவு-4 ஊழியர்களுக்கு ரூ.968லிருந்து ரூ.995 ஆகவும், பிரிவு 5 ஊழியர்களுக்கு ரூ.1,241 லிருந்து ரூ.1,275 ஆகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக பிரிவு 6 ஊழியர்களின் சம்பளம் ரூ.1,421 லிருந்து ரூ.1,460 ஆக ஏற்றம் கண்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு ஜனவரி.1,2024 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பகுதி நேர ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.13,140 லிருந்து ரூ. 13,500 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அரசுத்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக அகவிலைப்படி 46% லிருந்து 50% ஆக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

குடிநீர் தொட்டியில் இருந்தது மனித மலம் அல்ல தேன்கூடு..!! ஆய்வின் முடிவு..!!

Read Next

GOOD NEWS | TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு – 118 காலிப்பணியிடங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular