அரசு ஊழியர்களுக்கு சிறப்பான தீபாவளி பரிசு – முதல்வர் கொடுத்த அறிவிப்பு..!!

பீகார் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான வேலைப்பாடுகள் நடைபெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பரிசு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸை வழங்கி வருகின்றனர். அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஜூலை 1 ஆம் தேதியின் படி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகிறது.

42% அடிப்படையில் அகவிலைப்படிக்கான பலன்களை பெற்று வரும் நிலையில் தற்போது கூடுதலாக 4% வழங்கப்பட்டால் 46% அகவிலைப்படியை பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால் மாநிலத்தில் 11 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். ஆனால், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுவிடும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Read Previous

பிரபல பெண் யூடியூபரின் அந்தரங்க வீடியோ லீக்..!!

Read Next

நாளை முதல் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – கல்வித்துறை திடீர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular