அரசு ஊழியர்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு சலுகை.!! எந்த ஒரு தொகையும் செலுத்த தேவையில்லை..!!

அரசு வேலைகள் பெரும்பாலும் தனியார் துறை வேலைகளை விட பாதுகாப்பானதாக மக்களிடையே கருதப்படுகின்றது. ஏனெனில் குறைந்த அபாயத்துடன் கூடிய நிலையான வேலை வாய்ப்பை வழங்கி, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பலன்களையும் அளிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, ஊழியர்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் நலன் கருதி சேமிப்பு சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மூலம் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. மேலும், கனரா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களில் 50 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களுக்கு கால காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாய் எனவும், தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத்தொகை 16 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியன் வங்கி கணக்குயெனில் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கி கணக்கில் இருந்து ஊதியம் பெறும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 30 – 60 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு தொகை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read Previous

90 கிட்ஸ் மட்டும் தெரிந்த ரகசியம்.. காலம் மறைந்தவை..!! அது ஒரு இன்பமான வாழ்க்கை..!!

Read Next

செல்போன் பார்ப்பதை கண்டித்த தாய்..!! மகள் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular