அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது…
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கடந்த 2019 ஜனவரி 25ஆம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தை சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று ஊழியர்கள் ஆசிரியர்களை கேவலப்படுத்தினார், அவருடைய ஆட்சியில் போராடி அரசு ஊழியர் ஆசிரியர்களை பார்த்து அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா என்று கேட்டு ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார், ஆனால் இந்த ஆசிரியர் அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை என கூறுகிறார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 19 ஆம் ஆண்டு முதல்வர் பொறுப்பில் நான்கு முறை ஊதிய குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார், அதனால் அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள், ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தனர், அதன் பின் சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மி செய்ய வைத்த பெருமை திமுகவுக்கு உண்டு, திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை அதிமுக அரசு ரத்து செய்தது அனைத்தையும் 2006 இல் கருணாநிதி முதல்வராக இருந்த போது மீண்டும் நடைமுறைப்படுத்தினார், அரசு ஊழியர் நியமன தடைச் சட்டம், டெஸ்மா சட்டம் ரத்து செய்யப்பட்டன 1996 இல் அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணி காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டது, அதே வழியில் முதல்வர் மு க ஸ்டாலின் 2021 இல் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களை பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார் மகளிர்க்கு மகப்பேறு விடுப்பு காலம் ஒன்பது மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அரசு பணியில் பெண்களுக்கு 30 சதவீதம் என்பது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, கடும் நிதி நடிக்கடிகளுக்கு இடையிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!!




