புதுச்சேரி அரசு ஊழியர்கள் கட்டாயமாக ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது…
புதுச்சேரி பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது இதனால் பலரும் இறந்து வருவதாக இதனை கண்டித்து அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது அதனை நடைமுறைக்கு செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது, மேலும் காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை மின்சாரத்துறை மற்றும் அரசு சார்ந்த வேலைகள் பணியாற்று அனைவரும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது தலைக்கவசம் கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது, மேலும் இதனை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார், இந்த உத்தரவு காரைக்காலில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் தலைக்கவசம் அணியாத அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை கண்டித்து நடவடிக்கை எடுக்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது..!!




