திருவண்ணாமலை அருகே அரசு கலை கல்லூரியில் கழிவறைகளில் பாம்புகள் நடமாட்டம்..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கூட்டம் குவியலாக பாம்புகள் இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, இந்த கல்லூரியில் 8,500 மாணவ மாணவிகள் படித்து வருகின்ற நிலையில் கழிவறை சரிவர சுத்தம் செய்யாமலும் பயன்பாட்டிற்கு இல்லாத காரணத்தினாலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது, மேலும் இந்த கழிவறையை பயன்படுத்த வேண்டாம் என்றும் பேப்பர் மூலம் எழுதி ஒட்டப்பட்டுள்ளது இதனால் மாணவ மாணவிகள் கழிவறைகள் இல்லாமல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர், தமிழக அரசு பாம்புகளை பிடித்து காடுகளில் அல்லது மலைகளில் விட்டு கழிவறையை சரியான முறையில் சுத்தம் செய்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மாணவ மாணவிகள் கேட்டுக் கொண்டுள்ளனர், மேலும் இந்தப் பாம்புவின் குவியலைக் கண்டு பலரும் பயத்துடன் வீடியோக்களை எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்..!!