
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” என்ற தலைப்பில் கலைத் திருவிழா அரசு பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..
தமிழகம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கலைத் திருவிழா போட்டி வருகிற 22ஆம் தேதி நடக்க இருப்பதாகவும், இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பல போட்டிகள் நடத்தி பாராட்டு மற்றும் பரிசு பொருட்கள் தர இருக்கிறதாகவும், மேலும் அரசு பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் இடத்தில் அவர்களுக்கு தமிழக அரசு இந்த கலைத் திருவிழாவை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிகள் பெறும் பள்ளிகளிலும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..