தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் கனவுகளை நோக்கி விடாமுயற்சியோடு படிக்க வேண்டும் அப்படி படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் வெளிநாடுகளுக்கு படிக்க வாய்ப்பு உள்ளது என்றும் வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு அவர்களின் முதல் பயணச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது என்றும், பள்ளியில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியபோது இச்செய்தியை தெரிவித்துள்ளார்.
மேலும் தைவான்,ஜப்பான்,மலேசியா போன்ற நாடுகளில் 14 சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கான முழு கல்வி செலவையும் இலவசமாக தருகிறது என்றும், இனி அரசு பள்ளிகள் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு துறையில் பணியாற்றுவார்கள் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்..!!