• September 12, 2024

அரசு பஸ் கண்டக்டர்களுக்கு குட் நியூஸ்.. இதை செய்தால் பரிசுத்தொகை.. போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியது. தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அதாவது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் CREDIT CARD, DEBIT CARD, QR CODE மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Read Previous

இரவு உணவை சிறப்பாக அமைக்க பஞ்சாபி முட்டை மசாலா..!!

Read Next

பிரபல தொகுப்பாளரை கரம் பிடிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular