அரசு பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் – அமைச்சர் முக்கிய தகவல்..!!

கர்நாடகாவில் அரசு பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

டிக்கெட் கட்டணம்:

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க ஒழுங்குமுறைக் குழுவை அமைக்குமாறு கேஎஸ்ஆர்டிசி, கேகேஆர்டிசி, என்டபிள்யூகேஆர்டிசி, பிஎம்டிசி ஆகிய அரசுப் பேருந்துக் கழகங்களுக்கு மாநில நிதித் துறை சமீபத்தில் பரிந்துரை செய்தது. அந்தக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

அதனால் பஸ் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் திட்டம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் முந்தைய அரசாங்கத்தால் 2022 இல் முன்னாள் அதிகாரி எம்.ஆர். ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மூலம் நலிவடைந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது. மேலும் அரசுப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைக்க பொதுப் போக்குவரத்துக் கட்டணக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஒருநபர் குழு வலியுறுத்தியது என தெரிவித்துள்ளார்.

Read Previous

பெண் உறுப்பில் ஏற்படும் வெள்ளைப்படுதல் – கையாளும் முறைகள் என்ன..??

Read Next

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் கட்டாயம் 3 ஆண்டு சிறை – எச்சரிக்கும் கலெக்டர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular