அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவன்..!! போலீசார் விசாரணை..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று (செப்டம்பர் 2) அரசுப் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்த மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதாக தெரிகிறது. தினமும் இதுபோன்று நடப்பதால், ஆத்திரமடைந்த மாணவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், காட்டு நெமிலி நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் செல்வதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.