தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அரசு பேருந்து ஏற்ற மறுத்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரினை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கிராம பகுதியில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக் கல்லூரிக்கு நகர பேருந்துகள் மூலம் வருவது வழக்கமாய் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது இல்லை எனவும். இயக்கப்படும் பேருந்திலும் தங்களை ஏற்றி செல்ல மறுப்பதாகவும் எங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாக செல்வதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரினை தொடர்ந்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன் தூய்மை பணியாளர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவித்த நடத்துனார் மற்றும் நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் மீது துறை வீதி நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.