அரசு மற்றும் தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது இதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து ஈரோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது அரசு பேருந்தை ஓட்டி வந்த மல்லியகரை பகுதியைச் சேர்ந்த முருகன் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்க வாட்டு பகுதியில் திரும்பி நின்றது அரசு பேருந்து, அப்போது ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி இயக்கி வந்த பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் கதிரவன் தனியார் பேருந்தை இயக்கிய வந்தார், எதிரே வந்து தனியார் பேருந்து அரசு பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்தில் பேருந்தும் பேருந்தும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது, அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் காவல்துறை துறையினர் பயணிகளை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்று மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது, மேலும் போலீசார் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்…!!