
சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து கொண்டு வந்து உள்ளார். இவர் கான்கிரீட் கம்பெனியில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.
நேற்று காலை சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த நண்பனின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் மாங்கால் கிராமம் அருகே சென்ற போது வந்தவாசி நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.