அரசு பேருந்தை கடத்திச் சென்ற போதை ஆசாமி..!! பெரும் பரபரப்பு..!!

வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லாததால் அரசு பேருந்தையே கடத்தி அதை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப் போக முயன்ற வாலிபர் செய்த இந்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான பினீஷ்(வயது 23) நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவில் தென்மலை செல்வதற்காக புனலூர் பேருந்து நிலையத்திற்கு மது போதையுடன் வந்துள்ளார். மது போதையில் இருந்த இவர் பேருந்துக்காக காத்திருந்தபோது அவரிடம் அங்கு இருந்தவர்கள் இரவு நேரத்தில் தென்மலைக்கு பேருந்து சேவை கிடையாது காலையில் தான் செல்ல முடியும் என்று கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் அருகே போக்குவரத்து பணி நடந்து கொண்டிருந்த நிலையில் அங்கு இடம் பற்றாகுறை காரணமாக இரவு நேரங்களில் பேருந்துகளை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதைக் கண்ட அந்த வாலிபர் பேருந்து நிலையத்தின் அருகே ஒரு அரசு பேருந்து நிற்பதை பார்த்த பின்பு உடனே அந்த பேருந்தில் ஏறி அதனை வீட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

புறப்பட்டு அவசரத்தில் அவர் முகப்பு விளக்கை எரிய வைக்க மறந்துவிட்டார் சிறிது நேரம் சென்ற போது போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டு போதும் முகப்பு விளக்கு இல்லாமல் ஒரு அரசு பேருந்து வருவதை பார்த்து சந்தேகம் அடைந்து பேருந்து நிறுத்த கூறுகின்றனர். போலீசாரை கண்டதும் இந்த வாலிபர் பேருந்து நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது போலீசார் மடக்கி அவரை பிடித்து விசாரித்த போது வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லாததால் அரசு பேருந்து கடத்தி அதை வீட்டை நோக்கி ஓட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளார் இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read Previous

DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலை..!! சம்பளம்: ரூ.67,000/- உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

தலைவலி ஏன் வருகிறது தெரியுமா?.. இதுதான் காரணம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular