நமது இந்தியாவில் கொல்கத்தா மாநிலத்தில் நடந்த ஒரு மருத்துவரின் கொலை சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . இத்தகைய சம்பவம் குறித்து பல்வேறு மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதாவது அவர்களின் மருத்துவம் பார்க்கும் நேரத்தை குறைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை வெளிப்புற நோயாளிகளுக்கு பார்க்கும் மருத்துவ நேரத்தில் 3 மணி நேரம் குறைத்துள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய மருத்துவ நேரம் குறைப்பு என்பது இன்று முதல் மருத்துவர்களின் போராட்டங்கள் முடியும் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவம் பார்க்கும் நேரங்கள்:
அதாவது காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளிப்புற சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்த நிலையில் இனி போராட்டங்கள் முடியும் வரை காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவசர பிரிவுக்கான சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்று மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.