அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை..!!

அரவிந்த் கெஜ்ரிவால் சம்பந்தபட்ட  மதுபான கொள்கை ஊழல் வழக்கின் ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக பணம் மோசடி வழக்கில் அம்மாநிலத்தின் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த  மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு இடையில் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி மே பத்தாம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திறந்தது, அந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் இரண்டாம் தேதி மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார்.

இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவினை விசாரணை கடந்த 20ஆம் தேதி விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு ஜூன் 21ஆம் தேதி ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Read Previous

நில மோசடி வழக்கு..!! அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமை தலைமறைவு கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்..!!

Read Next

கடக ராசியில் நுழையும் புதன்..!! கவனமாக இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular