அரியலூரில் ரூபாய் 120 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!!!

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ரூபாய் 120 கோடி மதிப்பிலான 53 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..

அரியலூர் மாவட்டத்தில் இன்று நவம்பர் 15 நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார், இதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நவம்பர் 14 இரவு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார், அங்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் அவர் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார், இந்த நிலையில் இன்று காலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் சுமார் 130 ஏக்கரில் ரூபாய் ஆயிரம் கோடி முதலீட்டிலும் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டைச் சார்ந்த டீன் சூஸ் குடும்பத்தின் புதிய காலனி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார், தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஒன்றியம் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார், இதனை அழித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூபாய் 120 கோடி மதிப்புள்ளான 53 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூபாய் 88 கோடியில் 57 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ரூபாய் 174 கோடியில் 21 ஆயிரத்து 862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்..!!

Read Previous

இரண்டு குழந்தைகளின் உயிரை பறித்த எலி மருந்து சென்னையை உலுக்கிய சம்பவம்..!!

Read Next

சினிமா துளிகள் : சீனாவில் ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular