
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து அனைத்து நோய்களுக்கும் வீட்டிலேயே இயற்கையான முறையில் மருத்துவம் செய்தனர். இயற்கையான முறையில் மருத்துவம் செய்தும் சரியாகவில்லை என்ற பட்சத்திலேயே மருத்துவரை நாடினர். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அந்த நிலையில் வீட்டு பக்கத்திலேயே முளைக்கும் இந்த அருகம்புல்லில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. தெரியவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பதிவைப் படித்த தெரிந்து கொள்ளுங்கள்.
அருகம்புல் சாறு நம் உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் உதவுகிறது. சளி சைனஸ் ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை அருகம்புல் சாருக்கு உண்டு. தோல்வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.