அருகோலா கீரை சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!

அருகோலா கீரை பலரும் அறியாத ஒரு கீரை வகையாகும். இது கிட்டதட்ட குப்பைமேனி தழைகளை போலவே காணப்படும். இது எந்த சூழ்நிலையிலும் வளரக்கூடியது.

 

இது இலகுவாக கிடைக்கும் கீரை வகை என்பதால் இதன் அருமை பெருமைகள் பெரும்பாலானோர் அறிவதில்லை. ஆண்களுக்கு வரும் வழுக்கை பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இது அமைகிறது.

இந்த கீரையில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, K, C, M, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், செலீனியம், ஜிங்க், நிறைந்து காணப்டுகிறது.

 

இவ்வளவு நல்ல குணங்கள் கொண்ட கீரையை உண்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அருகோலா கீரை

பொதுவாக இந்த கீரையை விளையாட்டு வீரர்கள் அதிகமாக உண்ண வேண்டும். இதில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் காணப்படுகின்றன.

 

இதில் இதயத்தை பாதுகாக்ககூடிய நல்ல குணப்பண்புகள் அதிகம் உள்ளன. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை எடுத்து கொள்வதால் குழந்தையின் நலன் பாதுகாக்கப்படும். இந்த கீரையில் கெட்ட கொழுப்பு கரைக்கும் சக்தி இருப்பதால் இதை உடல் எடை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் உண்ணலாம்.

 

மற்றும் அனீமியா பிரச்சனை இருப்பவர்கள் இந்த கீரையை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

ஆரம்பத்தில் வளரக்கூடிய புற்றுநோய் செல்களை தடுக்கும் அதே பட்சத்தில் ரத்த குழாயில் உருவாகும் ரத்த கட்டிகளையும் அடியோடு இல்லாமல் செய்யும்.

 

இந்த கீரையை பருப்புடன் சேர்த்து உண்ணலாம். அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம்.

Read Previous

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா??.. இதோ விளக்கம்..!!

Read Next

ரயில்வே வேலை வாய்ப்பு..!! 1200+ காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular