
- அன்னாசிப்பழ புடிங்
தேவையானவை :
- அன்னாசிப் பழம் – 1 (துண்டாக்கியது)
- சர்க்கரை – 1/8 லிட்டர்
- மைதாமாவு – 1 டேபிள் ஸ்பூன்
- எல்லோ கலர் – 3 சொட்டு
- ஜெலட்டீன் – 1 பாக்கெட்
- முட்டை – 2
- பால் – 1/8 லிட்டர்
செய்முறை
1.முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அன்னாசிப் பழத்தை போட்டு அதனுடன் 1/8 லிட்டர் சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.மெல்லிய ஈரத்துணியை ஒரு பாத்திரத்தின் உள்ளேப் பரப்பி வெந்த அன்னாசிப் பழத்தை அதன் மேல் பரவலாக ஊற்றவும்.ஜெலட்டினை பாலில் ஊற வைத்து கலக்கி வைக்கவும்.
2.சர்க்கரையை முட்டையின் மஞ்சள் கருவோடு சேர்த்து நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையில் பாலையும் மாவையும் கலந்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.கெட்டியானவுடன் இறக்கி அத்துடன் ஜெலட்டின் கலந்த பாலை சேர்த்துக் கலக்கவும். பின் கலவையை ஆற வைக்கவும்.முட்டையின் வெள்ளைக் கருவோடு சிறிது சீனி சேர்த்து நன்றாக அடித்து, மேலே கூறிய கலவையில் சேர்த்து அன்னாசிப் பழங்களின் மேல் ஊற்றவும்.
3.கலவையை பிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு ஜில்லுனு பரிமாறவும்.