ஐசிசி சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலக கோப்பை தொடர் தற்போது 9 வது சீசனின் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் அரை இறுதி போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. அதன்படி இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணியும் மோத இருக்கின்றன.
இந்த இரு போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த அரையிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், கூடுதலாக 250 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை அந்த 250 நிமிடங்களையும் தாண்டி மழையால் போட்டி நடைபெறாமல் இருந்தால் சூப்பர் 8 சுற்றில் முதலிடத்தில் இருந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்வதாக அறிவிக்கப்படும்.