அர்ஜுனா மரப்பட்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

அர்ஜுனா மரப்பட்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஆயுர்வேத தாவரங்களில் முக்கியமான ஒன்றாக கூறப்படுவது அர்ஜுன் மரம். இந்த மரத்தின் பட்டை உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது அதை குறித்து பார்க்கலாம்.

இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, உடலை ஆரோக்கியமாக கொள்வது போல் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

இது மட்டும் இல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கவும், செரிமான பிரச்சனை யில் இருந்து விலகவும் உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு மருந்தாக பயன்படுகிறது.

சளி மற்றும் இருமல் குணமாக அர்ஜுனா பட்டை பயன்படுத்துவது மட்டுமல்லாமல், எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்து எலும்பை பலப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் வரவிடாமல் தடுக்க இந்த பட்டை உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அர்ஜுனா பட்டையை உணவில் சேர்த்து உடலை நோயிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம்.

Read Previous

ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கணுமா?.. அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!!

Read Next

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்..!! நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular