மத்திய அரசு விவசாயிகளின் நலனிலும், அவர்கள் வாழ்வாதாரத்திலும் அதிக அக்கறை கொண்டு, அவர்களுக்காக பல புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், விளைப்பொருள்களை கொள்முதல் செய்து மானிய விலைகளில் மக்களுக்கு வழங்கிவருகிறது. உதாரணமாக, 1 கிலோ கோதுமை மாவு 27.50 க்கு மக்களுக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு நிறைய பொருள்களில் விலையைக் குறைத்தாலும், அரிசி மட்டும் அதிக விலையில் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டுமே 15% அரிசியின் விலை ஏறி இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, இனி அரிசியையும் குறைவான விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. 1 கிலோ அரிசி 29 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு, 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா அரசு முதல் முறையாக அரிசி ATM மிஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புவனேஸ்வர் மாவட்டத்தில் முதன் முதலாக அரிசி ATM யை நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ‘கிருஷ்ண சந்திர பத்ரா’ இன்று திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, நியாய விலைக் கடைகளில் நடக்கும் திருட்டு மற்றும் எடைக்குறைப்பு போன்ற பிரச்சனைகளுக்காக இந்த அரிசி ATM திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த அரிசி ATM ஒடிசாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறந்து வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த அரிசி ATM யை ரேஷன் கார்டு வைத்தோ அல்லது ஆதார் கார்டில் உள்ள எண்களை செலுத்தியோ 25 கிலோ வரை அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.