அறிமுக டெஸ்டில் சதமடித்து 61 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்..!!

கிரேம் பொல்லாக்கின் 61 ஆண்டுகால சாதனையை முறியடித்து, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். 19 வயது 93 நாட்கள் வயதான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், புலவாயோவில் நடந்த முதல் டெஸ்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 112 பந்துகளில் தனது முதல் சதத்தை எட்டினார். சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களுக்கு, தற்போதைய ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் போட்டியில் 4 விக்கெட்டுக்கு 55 ரன்கள் என தென்னாப்பிரிக்கா ஆரம்பத்தில் தத்தளித்த நிலையில், பிரிட்டோரியஸ் மற்றும் சக அறிமுக வீரர் டெவால்ட் பிரெவிஸ் அணியை மீட்டனர்.

இந்த இளம் ஜோடி 95 ரன்கள் கூட்டணி அமைத்து, ஆரம்பகால சரிவுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை நிலைநிறுத்தியது. பிரெவிஸ் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், பிரிட்டோரியஸின் இன்னிங்ஸ் அணியை நங்கூரமிட்டது மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் ஒரு சிறந்த ஸ்கோரை நோக்கிச் செல்ல உதவியது. அவர் 153 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், 1964 இல் கிரேம் பொல்லாக் உருவாக்கிய சாதனையை முறியடித்து, நாட்டின் இளம் வயது டெஸ்ட் சதம் அடித்தவராக மாறியுள்ளார். இதற்கிடையே, சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்தவராக வங்கதேச கிரிக்கெட் அணியின் முகமது அஷ்ரபுல் உள்ளார். இவர் 2001இல் 17 வயது மற்றும் 61 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

Read Previous

பத்து நிமிடத்தில் காரசாரமான மட்டன் உப்புக்கறி..!! அசத்தலான ரெசிபி இதோ..!!

Read Next

பாஜக கூட்டணி இபிஎஸ்-க்கு சுமை – சீமான் அதிரடி பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular