நாம் தினமும் பலவிதமான அறிவுரைகளை கேட்டிருப்போம். மத்தகி அறிவுரைகள் அனைத்தும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நமக்கு பொருந்துவதில்லை. சிலருக்கு அந்த அறிவுரைகள் ஒத்துப்போகும் சிலருக்கு சரிப்பட்டு வராது எனவே எல்லா அறிவுரைகளையும் பொதுவாக எடுத்து கொள்வது சரியாகாது. அறிவுரைகளைக் கூட நேரம் காலம் இடம் பார்த்து பயன்படுத்த வேண்டும் இதை தெளிவாக புரிந்துகொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்..
ஒருவர் ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு அறிவுரையை படித்தார். நாய் நம்மை துரத்தும் போது அதை பார்த்து பயந்து ஓடுவதால் தான் நாய் நம்மை இன்னும் வேகமாக துரத்திக் கொண்டிருக்கிறது என்று. இதுவே நாயை பார்த்து நின்று கையிலே ஒரு கல்லை எடுத்துக்கொண்டு நாயை பார்க்கும் முறைத்தால் அது பயந்து ஓடிவிடும் என்று போட்டிருந்தது அவருக்கு இந்த அறிவுரை மிகவும் பிடித்து போய்விட்டது. நாட்கள் கழித்து அவரை நாயும் துரத்தியது முதலில் இவருக்கு இந்த அறிவுரை ஞாபகம் வரவில்லை வேகமாக நாய் கண்டு பயந்து ஓடிக்கொண்டே இருந்தார் திடீரென்று அவருக்கு இந்த அறிவுரை நினைவுக்கு வந்த உடனே ஓடாமல் நின்றால் கீழே கிடந்த கல் ஒன்று எடுத்துக்கொண்டு தைரியமாக திரும்பி நாயை பார்த்து முறைத்தான். ஆனால் அந்த நாய் அவரைப் பார்த்து பயப்படவும் இல்லை திரும்பி போகவும் இல்லை. நேராக வந்து அவரை கடித்து வைத்து விட்டது ஏனெனில் அது ஒரு வெறிபிடித்த நாய். அந்த புத்தகத்தில் அவர் படித்த அறிவுரை எல்லா நாய்களுக்கும் பொருந்தாது என்று உணர்ந்து கொண்டார்…
இந்த கதையில் வருவது போல நாமும் அறிவுரைகளை படிக்கிறோம் நிறைய அறிவுரைகளை கேட்கிறோம். ஆனால் எல்லா அறிவுரைகளும் எல்லா இடங்களுக்கும் பொருந்தி போவதில்லை எனவே இடம் பொருள் காலம் பார்த்து அறிவுரையை செயல்படுத்துங்கள் இதை புரிந்து கொண்டு நடந்தால் நலமாக வாழ முயற்சித்து பாருங்கள்..!!