அலட்சியத்தால் நொடியில் நடந்த பதைபதைப்பு விபத்து..!! பதறவைக்கும் வீடியோ.!!

மும்பை மாநகரில் சலையை அலட்சியமாக கடந்த இளம் பெண்ணின் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. தற்பொழுது அந்த பெண்மணி மருத்துவமனையில் தீவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிம்பிரி சின்சிவாத், ஸ்வராஜ் சவுக் பகுதியில் நேற்று பெண் ஒருவர் சாலையை கடந்து சென்றார். மொத்தமாக மூன்று பேர் அந்த சாலையை கடந்த நிலையில் அந்த பெண் மற்றும் சற்று இடைவெளி விட்டு சாலையை பொறுமையாக கடந்துள்ளார்.

அந்த சமயம் அதி வேகத்தில்  பயணம் செய்த கார் ஒன்று அந்த பெண்ணின் மீது எதிர்பாராத விதமாக  மோதி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்மணி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து கார் நிறுத்திய ஓட்டுனர் சற்றும் தாமதிக்காமல் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தற்பொழுது பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை கார் இடித்து தள்ளிய வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்தப் பெண் அலட்சியத்துடன் சாலையை கடந்து கார் அதிவேகத்தில் பயணம் செய்ததுதான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எம்ஐடிசி புசாரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://x.com/PTI_News/status/1801226002707730568?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1801226002707730568%7Ctwgr%5Eb4ee0b7abf2597376402c53b9469746780a5f01b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fmumbai-car-hits-women-video-viral

Read Previous

பச்சிளம் குழந்தைகளை சீரழிப்பது எப்படி..? – பெண் யூடியூபரின் அதிர்ச்சி பேச்சு..!! அதிரடி கைது.!!

Read Next

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவருக்கு திடீரென இருதய அறுவை சிகிச்சை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular