அலார சத்தம் கேட்டு எழுவோரா நீங்கள்..? அச்சச்சோ உங்களுக்குத்தான் பேராபத்து..!! விபரம் இதோ..!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும்பாலானோர் சேவல், குருவிகளின் சத்தம் கேட்டு காலையில் எழுந்த காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. செல்போனில் ஒன்றுக்கு நான்கு அலாரங்கள் வைத்து நாம் எழுந்திருக்கும் வழக்கத்தை கொண்டு வருகிறோம்.

இவ்வாறாக செல்போனில் அலாரம் வைத்து எழுபவருக்கு மனரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜப்பான் நாட்டில் உள்ள தேசிய ஆரோக்கிய அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அலாரம் எழுப்பும் சத்தம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அலர ஒலி ஆனது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்து பின் நாட்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றதாம். உடலுக்குள் உள்ள இயங்கும் உடலியக்க கடிகாரம் தனது உடலை தூங்க -விழிப்பு செயல்களுக்கு எதிராக இந்த அலாரம் ஒலி செயல்படுகிறது.

இதுவே நாம் அலாரம் வைத்தாலும் சில நேரம் எழுந்து கொள்ள இயலாமல் உடல் அலுப்பு காரணமாக நம்மை முடக்குகிறது. அலாரம் கேட்டு எழுவோர் தூக்க சுழற்சியை நேரடியாக தடைபடுத்துகின்றன. சிலர் பதறி அடித்தபடிஎழுக்கின்றனர். இதுவே அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரியாய் அமைகிறது.

Read Previous

சாப்பிடும் போது ஒதுக்கி வைக்கும் கருவேப்பிலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

Read Next

நீண்ட நாள் வாழ வேண்டுமா..? இந்த கீரையை மிஸ் பண்ணாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular