தொடர்ச்சியாக பல இடங்களில் ரேஷன் கடையில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பாமாயில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம் அளவுக்கு அதிகமாக பாமாயில் பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பார்ப்போம்.
பெரும்பான்மையான மக்கள் இன்றைய காலகட்டங்களில் பயன்படுத்தக்கூடிய ஒன்று பாமாயில், வீட்டு சமையலாக இருக்கட்டும் கடையில் சமைக்க கூடிய தின்பண்டங்கள், உணவு மற்றும் பொரித்த சில்லி இவற்றில் அதிகமாக பாமாயில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது, அப்படி இருக்கும் பட்சத்தில் முதல் நாள் பயன்படுத்திய பாமாயிலை மறுநாள் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது அப்படி அதனை நாம் உட்கொள்ளும் போது உடலில் புற்றுநோயை உருவாக்கி விடும், முடிந்தவரை சிறிதளவு பாமாயில் பயன்படுத்துவதனால் எந்த பிரச்சனையும் இருக்காது அதுவே அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் வகையில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் புற்றுநோய் உண்டு பண்ண கூடிய அனைத்து வகையான ஆரோக்கிய கேடுகளும் பாமாயில் உண்டு, முடிந்தவரை பாமாயிலுக்கு பதிலாக கடலெண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றை பயன்படுத்துவதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!