
நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஊட்டச்சத்தை சேர்த்து நமது உடலை வலுவாக்கத்தான் நாம் அனைவரும் நினைப்போம். ஆனால் ஒரு சில நன்மை தரும் உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அது தீமையில் தான் கொண்டு போய் முடியும். அப்படி வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவதனால் கிடைக்கும் தீமைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
வெந்தயத்தில் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து இந்த வெந்தயம் நம்மை விடுபட செய்யும்.
வெந்தயத்தை நமது உணவில் அதிகமாக எடுத்துக் கொண்டால் நமக்கு நிச்சயம் வாயு பிரச்சனை வரும். மேலும் இந்த வெந்தயம் ஒவ்வாமை பிரச்சனையையும் சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தி தரும். அது மட்டும் இல்லாமல் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவதால் வரும்.
ஆகையால் என்னதான் நன்மையை அதிகமாக கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. இதனால்தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள்.