
அழகான மனிதர்கள் என்றால் யார்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
அழகாக மனிதர்கள் என்றால் முகம் அழகாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பவர்கள் என்று அர்த்தம் கிடையாது. அழகான மனிதர்கள் யார் என்றால் முகம் மட்டுமல்ல மனதும் அழகாக இருக்க வேண்டும். இந்நிலையில் அழகான மனிதர்கள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் நாம் எல்லாரும் சாதாரண மனிதர்கள். ஆனால் அறிமுகம் இருப்பவர்களின் பார்வையில் ஒரு சிலருக்கு நாம் அழகானவர்கள் ஒரு சிலருக்கு நாம் அழகானவர்கள் கிடையாது. பொறாமை பட்டு நம்மை பார்க்கும் நபர்களின் பார்வையில் நாம் அகந்தையாளர்கள். நம்மை புரிந்து கொண்டோரின் பார்வையில் நாம் அற்புதமானவர்கள். நம்மை நேசிப்போரின் பார்வையில் நாம் சிறப்பானவர்கள். நம்மை வெறுப்பாகவும் காழ்ப்புணர்ச்சியோடும் பார்ப்பவர்களின் பார்வையில் நாம் மிகப்பெரிய கெட்டவர்கள். மனிதர்களை எப்போதும் திருப்தி படுத்தவே முடியாது. எனவே நீங்கள் பிறருக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு மனசாட்சியின் படி உங்களுக்கு அழகாக எந்த வித கெடுதலும் யாருக்கும் நினைக்காமல் யார் மீதும் பொறாமை படாமல் இருந்தாலே நீங்கள் அழகானவர் தான்.